லுலு மாலில் வேலைவாய்ப்பு-கோவை மக்களுக்கு ஜாக்பாட்!

Screenshot7283 1683888160

கோவை லுலு மாலில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இங்கே காணலாம்.

கோவை லட்சுமி மேல் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதுவும் பிரம்மாண்டமாக லுலு மால் எனும் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மக்கள் கூட்டம்

கோவை லுலு மாலில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் தினந்தோறும் புதிய புதிய ஆபர்களை அறிவித்து வருகிறது. இதன் மூலம் மக்களை லுலு நிறுவனம் தக்க வைத்து வருகிறது.

லட்சுமி மில் பகுதி

இது மட்டுமல்லாமல் கோவை லட்சுமி மில் பகுதியானது கோவை மாவட்டத்தில் மிகவும் முக்கியமான பகுதியாக இருப்பதால் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது மட்டுமல்லாமல் கோவை லுலு மால் அருகிலேயே ஸ்டார்பக்ஸ் என்னும் பிரபல காபி நிறுவனம் இருப்பதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வேலைவாய்ப்புகள்

இவ்வாறு இருக்க கோவை லுலு மாலில் அவ்வப்போது வேலை வாய்ப்புகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது கோவை லுலு மாலில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கோவை லுலு மாலில் வேலை செய்வதற்கு பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துணை மேலாளர்

அதன் விவரம் பின்வருமாறு:-

துணை மேலாளர்/இன்சார்ஜஸ் இதில் மூன்று வருடங்கள் அனுபவமும், எம்பிஏ படிப்பும் படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி அல்லது அதற்கு மேல் படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

​டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

கோஆர்டினேட்டர்: இந்த வேலைக்கு இரண்டு வருடங்கள் அதே துறையில் அனுபவமும் இதற்கு எந்த பட்டப்படிப்பும் படித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: இதில் ஒரு வருடங்கள் அனுபவம் அல்லது அனுபவம் இல்லை என்றாலும் ஏதாவது டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

​செக்யூரிட்டி ஆபிசர்

செக்யூரிட்டி ஆபிசர்/ சூப்பர்வைசர் : இதற்கு இரண்டு முதல் நான்கு வருடங்கள் பணி அனுபவம் ஏதாவது டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்யூரிட்டி கார்டு: இதற்கு ஒருவருடம் பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லை என்றாலும் பத்தாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷியர்ஸ்

கேஷியர்ஸ்: இதற்கு பிகாம் படித்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் அல்லது பணி அனுபவம் இல்லை என்றாலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேல்ஸ்மேன்

பிஷ் மாங்கர்ஸ்/பட்சர்ஸ்: ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேல்ஸ்மேன்: இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தாலும் பணி அனுபவம் இல்லை என்றாலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

​சிசிடிவி ஆபரேட்டர்

சிசிடிவி ஆபரேட்டர்: பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லை என்றாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்டோர் கீப்பர்: நான்கு முதல் ஐந்து வருடங்கள் ரீடைல் தொழிலில் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் ஏதாவது டிகிரி முடித்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அவர்கள் Resume-ஐ hr9416@lulugroupindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் லுலு சார்பில் எந்த ஒரு ஜாப் மேளா போன்று நடத்தவில்லை என்றும்,

இது தொடர்பான சந்தேகங்களுக்கு லுலு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *