சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்சார்பில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
வரும் ஜுன் 8, 9, 15,16, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காலை9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இப்பயிற்சி நடைபெறும். டிஜிட்டல் மாரக்கெட்டிங் என்றால் என்ன, வெப்சைட் உருவாக்குதல், வெப்சைட் மூலம் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-மெயில் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கற்றுத் தரப்படும்.
வேலை தேடுபவர்கள், விற்பனை பிரதிநிதிகள், விளம்பரம்மற்றும் மீடியாவில் பணிபுரிபவர்கள், வெப் டிசைனர்கள், பிளாக் எழுத்தாளர்கள், இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
பயிற்சிக் கட்டணம் ரூ.6 ஆயிரம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி பெற்றோருக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும். இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 95000 34831, 9677290237, 82201 03222 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.